ஜெரூசலேம் விற்பனைக்கில்லை – பாலஸ்தீன ஜனாதிபதி

download 24
download 24

டொனால்ட் டிரம்பின் சமாதான திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாலஸ்தீன ஜனாதிபதி முகமட் அப்பாஸ் ஜெரூசலேம் விற்பனைக்கில்லை என கருத்துவெளியிட்டுள்ளார்.

எங்கள் அனைத்து உரிமைகளும் விற்பனைக்குரியவையில்லை, அந்த உரிமைகள் குறித்து பேரம்பேச முடியாது.

அமெரிக்க ஜனாதிபதியின் யோசனையை பாலஸ்தீன, அராபிய கிறிஸ்தவ முஸ்லீம் குழந்தைகளால் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாங்கள் ஆயிரம் தடவை சொல்கின்றோம், இல்லை, இல்லை என, ஆரம்பத்திலிருந்தே இந்த யோசனையை நாங்கள் எதிர்த்துவந்துள்ளோம் எங்கள் நிலைப்பாடு சரியானது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை டொனால்ட் டிரம்பின் திட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்ரேலின் அனைத்து முக்கிய கோரிக்கைகளையும் உள்ளடக்கும் விதத்திலான திட்டத்தை டிரம்ப் முன்வைத்துள்ளார்.

இந்த திட்டம் இஸ்ரேல் மேற்கு கரையில் உள்ள அனைத்து குடியேற்றங்களையும் கையகப்படுத்துவதற்கு வழிவகுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.