கொத்தாக பலியான சீன மக்கள் – முடியாத சோகம்

2 vv
2 vv

கொரோனா கண்காணிப்பு முகாமாக இயங்கி வந்த ஹோட்டல் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதை அடுத்து ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்த 10 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்ததை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3097 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,651-லிருந்து 80,696-ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் பீஜியான் மாகாணத்தின் குவான்சு நகரில் 6 மாடிகள் கொண்ட ஹோட்டல் ஒன்று கொரோனா கண்காணிப்பு முகாமாக இயங்கி வந்தது.

கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஏராளமானோர் இந்த ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இந்த ஹோட்டல் நேற்று முன் தினம் இரவு 7.30 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. மீட்பு பணி ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்தவர்கள் 70-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தகவலறிந்த பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை தொடங்கினர்.

இதில் 34 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களையும் மீட்புக் குழுவினர் மாஸ்க் அணிந்து கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

முழுவீச்சில் இந்த நிலையில் இடிபாடுகளில் இருந்து 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 23 பேர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.