70 ஆயிரம் பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டனர்

7 6load
7 6load

சீனாவின் – வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்தி வருகிறது.

இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை 25 நாடுகளில் (இளவரசி கப்பல் அடங்கலாக) 4,299 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி,சீனா – 3,158,இத்தாலி – 631,ஈரான் – 291,தென் கொரியா – 61,ஸ்பைன் – 36,பிரான்ஸ் – 33,அமெரிக்கா – 31,ஜப்பான் – 12,டைமன்ட் இளவரசி (கப்பல்) – 7,ஈராக் – 7,பிரித்தானியா – 6,நெதர்லாந்து – 3,ஹொங் கொங் – 3,அவுஸ்திரேலியா – 3,சுவிஸ் – 3,சன் மரினோ – 2,ஜேர்மன் – 2,தாய்லாந்து, தாய்வான், எகிப்த், லெபனான், ஆஜென்டீனா, பிலிப்பைன்ஸ், பனாமா, மொரோக்கோ – 1 – மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இதேவேளை 119 நாடுகளில் (இளவரசி கப்பல் அடங்கலாக) இப்போது வரை 48,358 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் இதுவரை 70,876 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.