கொரோனாவிற்கு இடையே சீனாவில் புது வகை ஹண்டா வைரஸ்;இளைஞர் பலி

8 ad
8 ad

சீனாவில் ஹண்டா வைரஸ் எனப்படும் புது வகை வைரஸ் ஒன்றால் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் அச்சத்தில் இருக்கும் போது அவர்களின் மனது மிகவும் மென்மையானதாக இருக்கும்.

அவர்களால் சில பொய்யான விஷயங்களை கூட எளிதாக நம்ப முடியும். அப்படித்தான் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் கடும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

தங்களுக்கு என்ன ஆகுமோ, உலகம் என்ன நிலையை சந்திக்குமோ என்று மக்கள் கடும் அச்சத்தில் இருக்கிறார்கள். இது போன்ற சமயங்களில் மக்கள் மத்தியில் வதந்திகள் மிக எளிதாக பரவும்.

தற்போது அப்படித்தான் இணையம் முழுக்க ஹண்டா வைரஸ் செய்தி பரவி வருகிறது. இன்று நாள் முழுக்க டிவிட்டரில் ஹண்டா வைரஸ் குறித்த செய்திதான் டாப் டிரெண்டில் உள்ளது.

இதற்கு காரணம் சீனாவில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஒருவருக்கு ஹண்டா வைரஸ் தாக்கியது. சீனாவின் ஷான்டாங் பகுதியை சேர்ந்த இவருக்கு ஹண்டா வைரஸ் பரவியது.

இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் ஹண்டா வைரஸ் காரணமாக இவர் பலியானார். இதுதான் இணையம் முழுக்க தற்போது ஹண்டா வைரஸ் வைரல் ஆக காரணம்.

இவர் சீனாவை சேர்ந்தவர் என்பதாலும் சீனாவில்தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதாலும்தான் தற்போது ஹண்டா வைரஸ் குறித்த செய்தி பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் மக்கள் பயப்படும் அளவிற்கு ஹண்டா வைரஸ் கொடுமையானது கிடையாது.

இந்த ஹண்டா வைரஸ் சீனாவில் தோன்றவில்லை.

இது ஏற்கனவே இருக்க கூடிய வைரஸ்தான். இது 1976ல் தென்கொரியாவில் ஹண்டா வைரஸ் தோன்றியது.

இது எலிகள் மூலம் பரவ கூடிய வைரஸ் ஆகும். கொரோனா வைரஸ் போல இல்லாமல் இந்த ஹண்டா வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவாது.

அதேபோல் காற்று மூலமும் இந்த வைரஸ் பரவாது. இதனால் ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்கினால் அவரை தொடர்பு கொள்ளும் இன்னொரு நபருக்கும் இந்த வைரஸ் தாக்காது.

சுண்டு எலிகள் மூலம் இந்த வைரஸ் பரவும். இந்த வைரஸ் வயது வித்தியாசம் இன்று எல்லோரையும் தாக்கும் வைரஸ் ஆகாது. எலிகள் உடன் நேரடி தொடர்பு ஏற்பட்டால் இந்த ஹண்டா வைரஸ் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த வைரஸ் காரணமாக 40% வரை மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வைரஸ் தாக்கினால் தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி, உடல் நடுக்கம், சோர்வு, உடல் வலி, வாந்தி, பேதி ஏற்பட வாய்ப்புள்ளது. எலிகள் உடன் நேரடி தொடர்பு கொண்டவர்களுக்கு மட்டும், அதிலும் சிலருக்கு மட்டுமே இந்த வைரஸ் தாக்குதல் ஏற்படும். அதனால் இதுகுறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை.