பிரான்சிய முன்னாள் ஜனாதிபதி இறப்பு!

jack
jack

1995 முதல் 2007 வரை பிரான்சை வழி நடத்திய முன்னாள் ஜனாதிபதி ஜக் சிராக் தனது 86வது வயதில் மரணமடைந்துள்ளார்.

பிரான்சிய நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சிகளுக்கு நடுவில் அவருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரான்சில் நீண்ட காலம் ஜனாதிபதியாக இருந்த இரண்டாவது நபராவார்.

அந்த காலகட்டத்தில் ஜக் சிராக் உலக அரங்கில் பிரான்சின் நிலையை உயர்த்த அயராது உழைத்தார்.

தனது பதவி காலத்திற்குப்பின், அவர் நரம்பு மண்டல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே அதிகமாக அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் இன்று காலை அவரது குடும்பத்தார் அன்பிற்குரியவர்கள் சூழ அவரது உயிர் பிரிந்துள்ளது.