சுவிசில் கொரோனாவால் உயிரிழந்த தமிழரை காப்பாற்றியிருக்க முடியும்! தொலைக்காட்சி வெளியிடும் அதிர்ச்சித் தகவல்!!

dfsdafafafasf
dfsdafafafasf

சுவிஸில் வாழ்ந்த இலங்கைத் தமிழரான லோகநாதன் சதாசிவம் (வயது 59) , கொரோனோ தொற்றால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரெலிசூரி (TELE ZURI) என்ற தொலைக்காட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

சதாசிவம் ஒரு நீரிழிவு நோயாளியாவார் . சுவிஸ் சுகாதாரத்துறையால் ஏற்கனவே நீரிழிவு , இருதயநோயாளர்கள் கொரோனோ தொற்றின் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது .

இது தொடர்பான சுற்றுநிருபங்கள் வைத்தியசாலைகள் , குடும்பவைத்தியர் போன்றோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததோடு மாகாணரீதியாக குடும்பவைத்தியர்களுக்கான கூட்டத்திலும் , மாகாண வைத்திய துறையால் வலியுறுத்தப்பட்டிருந்தது.

தீவிர கவனமும் கரிசனையையும் கொள்ளுமாறு வைத்தியப்பிரிவு மட்டுமல்ல , தொழில் வழங்குநரும் அக்கறைகொள்ளுமாறு , சுவிஸ் மத்திய அரசு ஏலவே கோரியிருந்தது.

ஆனால் லோகநாதன் சதாசிவம் நீரிழிவு நோயாளியாக இருந்தபோதும், அவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்ட போதும், அது தொடர்பாக குடும்ப வைத்தியர் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என வைத்தியர் சங்கம் குற்றம் சாட்டுகிறது .

லோகநாதன் தரப்பின் குடும்ப வைத்தியரோடு தொடர்பு கொண்ட போது, “ இருமலுக்கான சாதாரண மருந்தே தருவேன் “. என குடும்ப வைத்தியரால் குறிப்பிட்டது, அவருடைய கடமையீனத்தையும், பொறுப்பற்ற செயலையும் காட்டியுள்ளது. வைத்தியருக்கு எதிரான சட்டநடவடிக்கையை மாகாண சுகாதாரதுறை எடுக்கும் சந்தர்பங்களில் அவருக்கான அனுமதிகூட நீக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனோ தொற்றால் முற்றுமுழுதாக நுரையீரல் செயலிழந்து சதாசிவம் லோகநாதன் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.