கொரோனா எப்படி தோன்றியது ; ஆராய்சிகளுக்கு தடை விதித்த சீனா!

0 n
0 n

கொரோனா குறித்த ஆய்வு கட்டுரைகளை வெளியிட சீன அரசு கடும் கட்டுப்பாடு விதித்து இருக்கிறது. முக்கியமாக கொரோனா வைரஸ் எங்கே தோன்றியது என்பது குறித்த ஆய்வு கட்டுரைகளை வெளியிட அந்நாட்டு அரசு தடை விதித்து உள்ளது.

கடந்த டிசம்பர் 1ம் தேதி சீனாவின் வுஹன் நகரில் முதல் நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது. வுஹன் நகரில் இருக்கும் மீன் மார்க்கெட் ஒன்றுக்கு சென்று திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது.

அவரை தொடர்ந்து அதே மார்க்கெட் சென்ற 35 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது.

அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக பரவி தற்போது உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவி உள்ளது. ஆனால் சீனா தொடர்ந்து ”கொரோனா வைரஸ் எங்கள் நாட்டில் தோன்றவில்லை.

எங்கள் நாட்டில் முதல் நபருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இது வேறு எங்காவது தோன்றி இருக்கலாம்” என்று கூறியது.
கடந்த டிசம்பர் 1ம் தேதி சீனாவின் வுஹன் நகரில் முதல் நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது.

வுஹன் நகரில் இருக்கும் மீன் மார்க்கெட் ஒன்றுக்கு சென்று திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. அவரை தொடர்ந்து அதே மார்க்கெட் சென்ற 35 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது.

அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக பரவி தற்போது உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவி உள்ளது. ஆனால் சீனா தொடர்ந்து ”கொரோனா வைரஸ் எங்கள் நாட்டில் தோன்றவில்லை.

எங்கள் நாட்டில் முதல் நபருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இது வேறு எங்காவது தோன்றி இருக்கலாம்” என்று கூறியது.

தொடர்ந்து கொரோனாவின் தோற்றம் எங்கே என்பது குறித்து குழப்பம் நிலவி வருகிறது. எங்கள் நாட்டில் கொரோனா தோன்றி இருக்க வாய்ப்பே இல்லை என்று சீனா உறுதியாக மறுத்து வருகிறது.

ஆனால் இன்னொரு பக்கம் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் சில இந்த வைரஸ் சீனாவில்தான் தோன்றியது என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறது.

இப்படி சண்டை போட்டுக்கொண்டாலும், யாராலும் இந்த கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதை மட்டும் விளக்க முடியவில்லை.

இந்த நிலையில்தான் சீனாவை சேர்த்து ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த கொரோனாவின் தோற்றம் குறித்த கட்டுரைகளை வெளியிட தொடங்கியது. கொரோனா எங்கு தோன்றி இருக்கலாம்.

எப்படி அது மனிதருக்கு பரவி இருக்கலாம் என்று கட்டுரைகளை வெளியிட்டது.

முக்கியமாக சீன அரசு இதில் எப்படி உண்மைகளை மறைத்தது. தொடக்கத்தில் சீன அரசு எப்படி தவறுகளை செய்தது என்று கூறப்பட்டுள்ளது. அங்கு நிறைய கட்டுரைகள் இப்படி வெளியானது.

இந்த நிலையில் சீனாவில் கொரோனாவின் தோற்றம் குறித்து செய்யப்படும் ஆராய்ச்சிகளுக்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

அதாவது கொரோனாவின் தோற்றம் பற்றி செய்யப்படும் ஆராய்ச்சி மற்றும் கட்டுரைகளை வெளியிட தடை விதித்துள்ளது.

இதுவரை வெளியான கட்டுரைகள் எல்லாம் நீக்கப்பட்டும் உள்ளது. புடான் பல்கலைக்கழகம் வெளியிட்ட கொரோனாவின் தோற்றம் குறித்த கட்டுரையும் அவர்களின் இணைய பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனாவில் கொரோனாவின் தோற்றம் குறித்து செய்யப்படும் ஆராய்ச்சிகளுக்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

அதாவது கொரோனாவின் தோற்றம் பற்றி செய்யப்படும் ஆராய்ச்சி மற்றும் கட்டுரைகளை வெளியிட தடை விதித்துள்ளது. இதுவரை வெளியான கட்டுரைகள் எல்லாம் நீக்கப்பட்டும் உள்ளது.

புடான் பல்கலைக்கழகம் வெளியிட்ட கொரோனாவின் தோற்றம் குறித்த கட்டுரையும் அவர்களின் இணைய பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இனிமேல் கொரோனா குறித்து செய்யும் அனைத்து ஆராய்ச்சி கட்டுரைகளை முழுதாக சீன அரசு ஆராய்ச்சி செய்த பிறகே வெளியிட வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனாவின் தோற்றம் குறித்த ஆராய்ச்சி கட்டுரைகள் எதையும் வெளியிட கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா எப்படி தோன்றியது என்பதில் தொடர்ந்து மர்மம் நிலவி வருகிறது.

கொரோனா சீனாவில்தான் தோன்றியது என்று உலக நாடுகள் சில விமர்சனம் செய்து வருகிறது. இந்த குற்றச்சாட்டை மாற்ற சீனா தீவிரமாக முயன்று வருகிறது.

இதனால்தான் தற்போது சீனா இது தொடர்பாக வெளியாகும் கட்டுரைகளை கட்டுப்படுத்தி வருகிறது. சீனாவில் மட்டும் இன்றி ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் கட்டுரைகளையும் அந்நாட்டு அரசு கண்காணிக்க தொடங்கி உள்ளது.