அதிகரித்தே செல்லும் கொரோனா தாண்டவம்!

corona
corona

ஸ்பெயின் மற்றும் ஒஸ்ட்ரியா ஆகிய நாடுகளில் பகுதி அளவில் மக்கள் தொழில்படுவதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் பிரித்தானியா, ஃப்ரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் நாட்டை தொடர்ந்தும் முடங்கச் செய்துள்ளன.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அந்த நாடுகளில் இன்னும் அதிகரித்த நிலையில் இருப்பதாக இந்த தீர்மானத்தை அந்த நாடுகள் மேற்கொண்டிருக்கின்றன.

உலக அளவில் கொரோனா தொற்றினால் 19 இலட்சத்து 39 ஆயிரத்து 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 871 ஆக அதிகரித்துள்ளது.

4 இலட்சத்து 59 ஆயிரத்து 441 பேர் நோயில் இருந்து பூரணமாக குணமடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த வருடம் டிசம்பர் மாதம் இந்த நோய் பரவ ஆரம்பித்திருந்த சீனா, தற்போது அதில் இருந்து விடுபட்டு வருவதாக கூறப்படுகின்ற நிலையில், அமெரிக்காவே கொரோனா பரவல் மையமாக நிலவுகிறது.

அங்கு இதுவரையில் இந்த நோயினால் 23 ஆயிரத்து 644 பேர் மரணித்துள்ளனர்.

அத்துடன் 5 இலட்சத்து 87 ஆயிரத்து 173 பேர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் 20 ஆயிரத்து 465 பேர் பலியானதுடன், அங்கு ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 516 பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இந்தியாவில் இதுவரை 10 ஆயிரத்து 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு 358 பேர் பலியாகியுள்ளனர்.