வென்டிலேட்டர் கிடைக்காமல் பலியான கொரோனா நோயாளர்கள்

5 cof
5 cof

சீனாவில் கொரோனாவைரஸ் தாக்கி பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் சரியான வென்டிலேட்டர் வசதி கிடைக்காமல் இறந்தவர்கள் என்று ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

கொரோனாவைரஸ் தாக்கிப் பலியானவர்களில் ஐந்தில் ஒருவருக்கு மட்டுமே முறையான வென்டிலேட்டர் வசதி கிடைத்துள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இதுதொடர்பான ஆய்வறிக்கையை அமெரிக்க மருத்துவ கழகம் தனது இதழில் வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ள தகவல்கள் அதிர்ச்சி தருவதாக உள்ளன. இந்த ஆய்வு அனைத்தும் வூஹானில் உள்ள 21 மருத்துவமனகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.

அதாவது, மரணத்திற்கு முன்பு ஐந்தில் ஒரு நோயாளிக்குத்தான் அதி தீவிர வென்டிலேஷன் வசதி கிடைத்துள்ளது. மற்றவர்களுக்கு அது சரிவர கிடைக்கவில்லை அல்லது கொடுக்கப்படவில்லையாம். ஜனவரி 21 முதல் 30ம் திகதி வரை மொத்தம் 168 நோயாளிகள் கொரோனாவைரஸ் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

தென் கிழக்கு சீன பல்கலைக்கழகத்துக்குட்பட்ட ஷோங்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் ஆக்ஜின் தெரப்பி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 46 பேருக்கு மட்டும்தான் மூக்கு வழியாக டியூப் போட்டு அல்லது முகத்தில் மாஸ்க் போட்டு ஆக்சிஜன் செலுத்தும் வசதி கிடைத்துள்ளது.

மூன்றில் ஒரு நோயாளிக்கு high-flow nasal oxygen therapy வசதி கிடைத்துள்ளது. 72 நோயாளிகளுக்கு noninvasive ventilation வசதி கிடைத்துள்ளது. 34 நோயாளிகளுக்கு மட்டுமே வாய்க்குள் டியூபைப் போட்டு கொடுக்கப்படும் வென்டிலேட்டர் வசதி கிடைத்துள்ளது. பல நோயாளிகள் முறையான வென்டிலேட்டர் வசதி கிடைக்காமல் பலியாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அதேசமயம், வேறு பல காரணங்களும் கூட மரணம் சம்பவிக்கக் காரணமாக இருக்கக் கூடும் என்றும் இவர்கள் சொல்கிறார்கள். சில நோயாளிகளுக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்திருக்கிறது. இதனால் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு உடனடியாக invasive mechanical ventilators வசதி செய்து கொடுக்கப்படவில்லை. அது கிடைத்திருந்தால் அவர்கள் உயிர் பிழைத்திருக்கக் கூடும்.

அவசரம் அவசரமாக மருத்துவப் பணிகளுக்கு அழைக்கப்பட்ட பலருக்கு சரியான பயிற்சி கிடைக்காத காரணத்தால் எந்த நேரத்தில் என்ன மாதிரியான வென்டிலேட்டர் தரப்பட வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்டு அதில் பலர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இறந்த பலரும் அதிக அளவிலான ரத்த அழுத்தம் காரணமாகவே உயிரிழந்துள்ளனர். இதை வைத்துப் பார்க்கும்போது இந்த ஆய்வு முடிவு சரியே என்றும் நம்பப்படுகிறது.

கொரோனாவைரஸ் மனித உடலில் புகுந்த பின்னர் நுரையீரலைத்தான் குறி வைப்பதாக ஏற்கனவே மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே வென்டிலேட்டர்தான் இந்த சிகிச்சையில் மிக மிக முக்கியமாக தேவைப்படும் ஒன்றாகும். ஆனால் அது சரியாக கிடைக்காமல் போனதால் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி தருவதாக உள்ளது.