ட்ரம்ப்பின் அதிரடித் தீர்மானம்!

download 6 5
download 6 5

உலக சுகாதார அமைப்புக்கு நிதி வழங்குவதை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவு தீவிரக் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு தனது அடிப்படைக் கடமையிலிருந்து நழுவிவிட்டதாகவும், சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டிய ட்ரம்ப், அந்த அமைப்புக்கு அமெரிக்கா சார்பில் நிதி வழங்குவதை நிறுத்த உத்தரவிட்டார்.

அமெரிக்காவின் முடிவுக்கு சீனாவும் கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது,

“உலக சுகாதார அமைப்புக்கு வழங்கிய நிதியை நிறுத்திய அமெரிக்காவின் முடிவு தீவிரக் கவலையை அளித்துள்ளது. இது ஒரு முக்கியமான தருணம். அமெரிக்காவின் முடிவு உலக சுகாதார அமைப்பின் திறன்களை பலவீனப்படுத்தும். தொற்றுநோய்க்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பைக் குறைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.