ஆபிரிக்காவில் கொரோனா வைரஸால் 3 லட்சம் பேர் இறப்பார்கள் – அதிர்ச்சி அறிக்கை

3 xx
3 xx

ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸால் 3 லட்சம் பேர் இறக்க நேரிடும் என புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அந்த நாடுகள் கொரோனா பரவும் மையமாக மாறும் அபாயமுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை 18 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் கடந்த வாரங்களில் எத்தனை மோசமான பாதிப்பை கொண்டிருந்ததோ அந்த அளவுக்கு ஆப்பிரிக்காவின் நிலை உள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை காணும் போது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இங்கு கொரோனாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத மிக மோசமான கட்டத்தில் நிச்சயம் ஆப்பிரிக்க நாடுகளில் 33 லட்சம் கொரோனா இறப்புகளை ஆப்பிரிக்க நாடுகள் சந்திக்க நேரிடும் என ஆப்பிரிக்காவுக்கான ஐநா பொருளாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் என்னதான் தீவிரமாக சமூக விலகல் கடைப்பிடித்தாலும் அந்த கண்டத்தில் 12.2 கோடி பேர் பாதிக்கப்படுவர். கொரோனா பரிசோதனை, பாதுகாப்பு உபகரணங்கள், சிகிச்சைக்காக 4400 கோடி டொலர் நிதி தேவைப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, ஐவரி கோஸ்ட், கேமரூன், கானா ஆகிய நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது

அங்கு மருத்துவ வசதிகளோ, தேவையான உபகரணங்களோ இல்லை. செயற்கை சுவாசக் கருவியும் சமூக விலகலை முறையாக கடைப்பிடிக்காததாலும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை என ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனாவால் 3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் என தெரிவித்துள்ளது.

ஆபிரிக்கா கண்டங்களில் எச்ஐவி, காசநோய் போன்றவை அதிகரித்து காணப்படுகின்றன.

இங்குள்ள மக்களில் சில பேருக்கு காய்ச்சல், இருமல் என மிதமான அறிகுறி தென்படுகிறது.

வயதானோருக்கு நிமோனியாவை ஏற்படுத்தும் கொரோனா உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.

வறுமை, நெரிசலான நகர்புற அமைப்புகள், சுகாதார பிரச்சினைகளே ஆபிரிக்கா வைரஸால் பாதிப்பட்டதற்கு காரணம் என ஐ.நா தெரிவித்துள்ளது.