பிரான்சிலும் 20 ஆயிரத்தை தாண்டியது உயிரிழப்பு

6 ff
6 ff

அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலியையடுத்து பிரான்சிலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அங்கு 1 இலட்சத்து 55 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

உலகின் மிக அழகான நாடுகளில் ஒன்று பிரான்ஸ். சுகாதார வசதியிலும் தலை சிறந்து விளங்கும் நாடும் கூட. பொருளாதாரத்தில் மிக வலிமையான நாடு பிரான்ஸ். நவீன ஆயுதங்களுடன் மிக வலிமையான ராணுவத்தையும் கைவசம் வைத்துள்ளது. உலகின் தலை சிறந்த நாடுகளில் முதல் 5 இடங்களுக்குள் பிரான்ஸ் நிச்சயம் இடம் பிடிக்கும்.

இப்படி பல உயரிய சிறப்புகளை கொண்ட பிரான்ஸ் கண்ணுக்குத்தெரியாத கொரோனா என்ற அரக்கனிடம் சிக்கி அழிந்து வருகிறது.

தினமும் கொரோனாவால் பிரான்ஸில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இன்று மட்டும் 2489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 155 383 ஆக உயர்ந்துள்ளது.

உலகிலேயே கொரோனாவால் அதிக மரணத்தை சந்தித்த நான்காவது நாடாகவும் பிரான்ஸ் உருவெடுத்துள்ளது.

அதாவது அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளை தொடர்ந்து பிரான்சிலும் 20 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது உயிரிழப்பு.

நேற்று ஒரு நாளில் மட்டும் 547 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவால் இதுவரை 37409 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனா பாதிப்புடன் பிரான்சில் தற்போது 97709பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 5683 பேர் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் தீவர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.பிரான்சில் பெப்ரவரி 15ம் திகதி 12 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை மார்ச் 1ம் திகதி 100 ஆக உயர்ந்தது

மார்ச் 11ம் திகதி 2 ஆயிரத்தை கடந்த நிலையில், அடுத்து ஒவ்வொரு நாளும் அதிவேகமாக பரவியது. அடுத்த ஒரு வாரத்தில் 10 ஆயிரத்தை கடந்தது.

மார்ச் 25ம் திகதி பிரான்சில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா இருந்தது. அடுத்த 21 நாட்களில் அதாவது ஏப்ரல் 14ம்திகதிக்குள் 1இலட்சத்து 30 ஆயிரம் ஆக உயர்ந்தது. இப்போது 1இலட்சத்து 55 ஆயிரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.