உலகத்தையே நாறடிச்சுட்டு; சீன நிறுவனத்தின் குசும்பு!

9 cc
9 cc

ஊரே பத்தி எரிஞ்சுச்சாம் நீரோ மன்னன் பிடில் வாசிச்சானாம்.. இப்படி சொல்வார்கள்… அந்தக் கதைதான் தற்போது சீனாவில் நடந்திருக்கு. உலகமே கொரோனாவைரஸிடம் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் சீனாவில் ஒரு நிறுவனத்தில் முத்தப் போட்டி நடத்தியிருக்கிறார்கள்.

இது சம்பந்தமான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி, அதை பார்த்து உலக நாடுகள் காதில் புகையுடன் செம கடுப்பில் உள்ளன.

சீனாவின் வூஹான் தெருக்களில்தான் கொரோனா தோன்றி பரவியது.. உலக நாடுகளுக்கு சரசரவென வைரஸை ஏற்றுமதி செய்துவிட்டு, இப்போது பழையபடி வர்த்தகம், வேலை, வியாபாரத்தில் இறங்கிவிட்டது.

உலக நாடுகளோ, வைரஸை அடக்க முடியாமல், இதற்கு மருந்ததை கண்டுபிடிக்கவும் முடியாமல், செத்து மடியும் மக்கள் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வரவும் முடியாமல் திணறி வருகிறது.

இதைவிட கொடுமை, நோயை பரப்பிய இதே சீனாவிடம்தான் மாஸ்க் முதல் டெஸ்ட் கிட்கள் வரை வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தாங்கள் வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம் என்று சொல்லி சந்தைகளில் பூனை, பாம்பு என வரிசைப்படுத்தி கடைவிரித்து லாபம் பார்க்க தொடங்கிவிட்டனர்.

மூடப்பட்ட தொழிற்சாலைகள் திரும்பவும் இயங்க தொடங்கிவிட்டன. இந்நிலையில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. சுஷோ என்ற ஊரில் யூயேயா என்கிற பர்னிச்சர் கடை ஒன்று உள்ளது.

இந்தக் கடைக்காரர் தனது ஊழியர்களுக்கு ஒரு முத்தப் போட்டியை வைத்துள்ளார்.

யுயேயா கடையின் வளாகத்திலேயே முத்தப் போட்டியை நடத்தியுள்ளார். அதில் கலந்து கொண்டு ஊழியர்கள் சரமாரியாக முத்தம் கொடுத்துக் கொண்டனர்.

ஆனால் இந்த முத்தம் கொடுத்துக் கொண்டவர்களில் யாருமே கணவன் மனைவி கிடையாது. அதை விட முக்கியமாக முத்தம் கொடுத்துக் கொண்டவர்களுக்கு நடுவே கண்ணாடியை வைத்து விட்டனர்.

அதாவது ஆணும் பெண்ணும் கண்ணாடிக்குத்தான் முத்தம் கொடுத்துக் கொண்டனர். அவர்களின் உதடுகள் ஒட்டிக் கொள்ளவில்லை.

இது எதுக்கு இப்படி ஒரு போட்டி என்று கேட்டதற்கு, ஊழியர்களுக்கு கொரோனாவைரஸ் காரணமாக மன அழுத்தம், சோர்வு இருக்கலாம். அ

திலிருந்து மீண்டு தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள இது உதவும் என்று கடைமுதலாளி விளக்கம் அளித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சீனாவின் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கூடவே பெரும் கண்டனங்களையும் குவித்து வருகிறது.

இப்போதுதான் கொரோனாவைரஸிலிருந்து மெதுவாக மீண்டு வந்திருக்கிறோம்.

அதற்குள் சமூக இடைவெளியைக் குலைக்கும் வகையில் ஏன் இப்படி ஒரு முத்தப் போட்டி.

இதனால் ஊழியர்கள் செக்ஸ் ரீதியாக தூண்டப்பட மாட்டார்களா.

இதனால் நோய் மீண்டும் பரவாதா என்று பலர் கொந்தளிக்க ஆரம்பித்து விட்டனர்..

வாயில் வந்தபடியெல்லாம் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிறுவனத்தை மீண்டும் திறந்ததால் அதைக் கொண்டாடும் வகையிலும், ஊழியர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும்தான் இந்தப் போட்டி நடத்தப்பட்டதாக நிறுவனம் மீண்டும் விளக்கியுள்ளது.

இதுகுறித்து கடை முதலாளி மா கூறுகையில், கண்ணாடி நடுவில் இருந்ததால் உதடுகள் ஒட்டவில்லை.

எனவே நோய்த் தொற்றுக்கு வாய்ப்பில்லை. ஜோடிகளில் சிலர் தம்பதிகள் ஆவர். சேர்ந்து எங்களது நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் என்றார்.

மேலும் அவர் கூறுகையில் இந்த கொரோனாவைரஸ் எல்லோரையும் டெ ன்ஷனாக்கி விட்டது. மனசெல்லாம் புழுக்கமாகி விட்டது. எனவே ரிலாக்ஸ் செய்து கொள்ள இது அவசியம். இதனால் உற்பத்தியும் அதிகரிக்கும், அவர்களும் உற்சாகமாக இருப்பார்கள்.

அதனால்தான் இதைச் செய்தேன். இப்போது ஊழியர்கள் நல்ல உற்சாகமாக உள்ளனர் என்றார் மா! ஏற்கனவே சீனா மீது உலக நாடுகள் கடுப்பில் இருக்கும்போது, இந்த ஜோடிகள் முத்தம் தருவதை பார்க்க பார்க்க, காதுகளில் புகை மானாவாரியாக வந்து கொண்டிருக்கிறது!!