200,000 பரிசோதனைகள்’ என்ற இலக்கை அடைந்திடுவோம் – பொரிஸ்

1 gh
1 gh

‘ஒரு நாளைக்கு 200,000 கொரோனா வைரஸுக்கான சோதனைகள்’ என்ற இலக்கை மே மாத இறுதிக்குள் எட்டிவிடுவோம் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதியளித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் கூறுகையில்,

“நிர்ணயிக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகளை மீறிய திறன் எம்மிடம் உள்ளது. இதனை நிவர்த்திசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இம்மாத இறுதிக்குள் ஒருநாளில் 200,000 சோதனைகள் என்ற இலக்கை அடைவதே எனது இலட்சியம்.  அதன்பின்னர் இந்த சோதனை எண்ணிக்கை மேலும் அதிகமாகும்.

இதேவேளை, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பான திட்டங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை வகுக்கப்படும். அவற்றில் சில நடவடிக்கைகள் திங்களன்று மேற்கொள்ளப்படலாம்” எனக் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை 100,000 சோதனைகள் என்ற இலக்கை எட்டியதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால் அதன் பின்னர் அந்த எண்ணிக்கை குறைந்தமை குறிப்பிடத்தக்கது.