மெக்ஸிகோவில் 111 சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழப்பு!

1 u
1 u

வட அமெரிக்கா நாடான மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 111 சுகாதாரப் பணியாளர்கள், இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை இணைச் செயலர் ஹியூகோ லாபெஸ் கேடல் கூறுகையில், ‘நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 111 சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 66 பேர் மருத்துவர்கள் ஆவர்.

மேலும் 16 செவிலியர்கள், 29 மருத்துவமனைப் பணியாளர்கள், பல் மருத்துவ நிபுணர்கள், ஆய்வக நிபுணர்கள் ஆகியோரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தனர்’ என கூறினார்.

மெக்ஸிகோவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 38,324பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3,926பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் மெக்ஸிகோவில் 352பேர் உயிரிழந்துள்ளனர். 1997பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து மெக்ஸிக்கோவில் பதிவான அதிகபட்ச தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.

மெக்ஸிகோவின் முந்தைய தினசரி அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த வியாழக்கிழமை, 257ஆக பதிவாகியிருந்ததே ஆகும்.