அவசரகால நிலையை நீக்குகிறது ஜப்பான்!

0 gg
0 gg

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஒசாகா, கியோட்டோ மற்றும் ஹியோகோவில் நடைமுறையில் உள்ள அவசரகால நிலையை நீக்குவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கை 100,000 பேருக்கு 0.5 தொற்றுகளின் கீழ் உள்ளது என்று பொருளாதார அமைச்சர் யசுடோஷி நிஷிமுரா கூறியுள்ளார். இதன் அடிப்படையிலேயே அவசரகால நிலை நீக்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. எனினும், தலைநகரான டோக்கியோ, வடக்கு தீவான ஹொக்கைடோ உட்பட மேலும் நான்கு மாகாணங்களில் அவசரகால நிலை நீடிக்கின்றது.

டோக்கியோவில், 100,000 பேருக்கு நோய்த்தொற்று வீதம் 0.59 ஆகவும், ஹொக்கைடோவுக்கு 0.69 ஆகவும் உள்ளது.

அவசரகால நிலைமையின் கீழ், உள்ளூர் ஆளுநர்களுக்கு வணிகங்களை மூடி வைத்திருக்கவும், மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி கேட்கவும் அதிக அதிகாரங்கள் உள்ளன. இருப்பினும் இந்த விதியை மக்கள் மீறினால் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாது.