பாகிஸ்தான் பிரதமர் சீனா விஜயம்

China Pakistan
China Pakistan

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக சீனாவுக்கு சென்றுள்ள நிலையில், சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

இன்று காலை சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சீனாவின் பண்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் நாட்டிற்கான சீன தூதுவர் யா ஜிங் இருவரும் வரவேற்றுள்ளனர்.

சீன அதிபர் ஷீ ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லீ கெகியாங் ஆகியோரை சந்திக்கவுள்ளதுடன், குறித்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள், வர்த்தக உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக பாகிஸ்தான் அரச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதில் இருந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

சீன அதிபர் எதிர்வரும் 11 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ள நிலையில், இம்ரான் கானின் சீன பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.