வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

nobel prize 1
nobel prize 1

2019-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு ஜெர்மன், பிரித்தானியா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 3 பேருக்கு
வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் அறிவியல், இலக்கியம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜான் பி குட்எனஃப் (ஜெர்மன்), ஸ்டான்லி விட்டிகாம் ( பிரித்தானியா), அகிர யோஷினோ (ஜப்பான்) மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 97 வயதில் நோபல் பரிசு பெறுகிறார் மிக மூத்த விஞ்ஞானி ஜான் பி குட்எனஃப். லித்தியம் ஐயன் ரீசார்ச்சபிள் பேட்டரியை கண்டுபிடித்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.