ஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

saudi
saudi

ஈரானுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல் மீது சவுதி அருகே நடுக்கடலில் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சவுதியின் ஜெட்டா துறைமுகம் அருகே ஈரானுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் மீது நடுக்கடலில் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலால் எண்ணெய் கப்பல் நடுக் கடலில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கப்பலில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கடலில் கொட்டி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சவுதி அரசுக்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், எண்ணெய் கப்பல் ஆகியவற்றின் மீது செப்டம்பர் 14ல் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ஈரான் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி தீவிரவாதிகளே இத்தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்பட்டது.

இதனால் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருந்ததுடன் வளைகுடா நாடுகளில் பெரும் போர்ப் பதற்றம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,