இந்திய – சீன தலைவர்களிற்கிடையிலான சந்திப்பு

india china
india china

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இந்தியா-சீனாவிற்கிடையே இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் சீனா அதிபர் ஜின்பிங் நேற்றைய தினம் இந்தியா வருகை தந்திருந்தார்.

இருவரிற்கிடையிலான 2 நாள் சந்திப்பு நிகழ்ச்சி தமிழ் நாட்டின் சென்னை சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நேற்று அரம்பமானது.

சென்னை வந்த சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குக்கு தமிழக கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக அரசு, மத்திய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு தமிழகத்தின் பாரம்பரிய கலைகளின் நடனம், நாதஸ்வரம் இசை ஆகியவற்றுடன் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வின்போது சீனா மற்றும் இந்தியா இடையிலான கலை மற்றும் கலாசார அம்சங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

மாலையில் மாமல்லபுரம் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்றார். இருவரும் கடற்கரையில் உள்ள கோயில்கள், சிலைகள் ஆகியவற்றைக் கண்டுகளித்தனர். சிலைகள் குறித்த விவரங்களை சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி விளக்கிக் கூறினார்.

அதன்பின் இரு தலைவர்களும் கடற்கரை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளை கண்டுரசித்தனர். அப்போது சீன அதிபருக்கு தஞ்சாவூர் ஓவியமும், அன்னம் வடிவிலான விளக்கையும் பிரதமா் நரேந்திர மோதி பரிசளித்தார்.

இந்நிலையில் இருநாட்டு தலைவர்களிற்குமிடையில் இன்றைய 2ம் நாள் சந்திப்பில் வர்த்தகம், முதலீடு, வர்த்தகப் பற்றாக்குறை, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பது தொடர்பான முக்கியப் பேச்சுகள் இடம் பெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.