கடற்கரையை சுத்தம் செய்த மோடி!

modi in chennai12
modi in chennai12

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான 2ம் கட்ட அதிகாரபூர்வமற்ற சந்திப்பு மாமல்லபுரத்தில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றது.

கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் தங்கியிருந்த மோடி கடற்கரையில் இன்று (Oct.12) காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் கோவளத்தில் உள்ள கடற்கரையில் பிரதமர் மோடி தனி ஆளாக பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமரின் இந்த வீடியோ பல்வேறு நபர்களால் விமர்சிக்கப்பட்டாலும் பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்பதுடன் தூய்மை இந்தியா என்ற திட்டத்தை கொண்டு வந்திருந்தமையும் மோடியின் முக்கிய பிரச்சாரங்களில் ஒன்று.

இனியாவது கடற்கரையை நம் குடிமகன்கள் திறந்த வெளி பாராக பயன்படுத்தாமல் தடுப்பார்களா? கொஞ்சமாவது தூய்மையை கடைப்பிடிக்க முன்வருவார்களா? பிளாஸ்டிக் உபயோகிப்பதை தவிர்க்க மக்கள் மனசார நினைப்பார்களா எனும் கேள்விகள் மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வருகின்றது.