கொரோனா தடுப்பு மருந்து: குவிந்த கோடீஸ்வரர்கள்

download 10
download 10

கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை ரஷ்யா உருவாக்கி இருப்பதாக செய்தி வெளியான நிலையில், அந்த மருந்தை நாட்டின் கோடீஸ்வரர்கள் வாங்கி குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கு பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, ரஷ்யா போன்ற பல நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.

ஒரு சில நாடுகளில் இந்த மருந்துக்கான முதல் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துவிட்டதாக கூறப்பட்டது.ஆனால் ரஷ்யாவை சேர்ந்த செச்செநோவ் பகுதியில் இருக்கும் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் பல்கலைக்கழகம் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கொரோனா தடுப்பு மருந்தை இப்போதே, அந்நாட்டு கோடீஸ்வரர்கள் வாங்க முயற்சித்து வருகின்றனர்.

சில கோடீஸ்வரர்களுக்கு ஏற்கனவே இந்த கொரோனா தடுப்பு மருந்தை கொடுத்துவிட்டதாகவும், அந்நாட்டு அரசுக்கு நிதி உதவியை வழங்கும் யுனைட்டட் கோ ரூசல் போன்ற நிறுவனங்களுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக பல கோடிகள் இறக்கப்பட்டுள்ளதுடன் தற்போது வரை உருவாக்கப்பட்ட அனைத்து மருந்துகளும் வாங்கப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த நாட்டு கோடீஸ்வரர்கள், மிகவும் அமைதியாக, ரகசியாக செய்து வருவதால், இதைப் பற்றி தெரிந்த மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.