சௌதி அரேபியாவில் பேருந்து விபத்தில் 35 பேர் பலி- பிரதமர் மோடி இரங்கல்

modi
modi

சவுதி அரேபியாவில் நடந்த பஸ் விபத்தில் வெளிநாட்டினர் 35 பேர் பலியானார்கள். இதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் குடியேறிய அரபு மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிலர், மக்காவைச் சுற்றி உள்ள முஸ்லிம் புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டனர். இதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஒரு தனியார் பேருந்தினை வாடகைக்கு பிடித்தனர்.

அந்த பஸ்ஸில், மதீனா சென்று விட்டு, அங்கிருந்து மக்காவுக்குச் சென்று கொண்டிருந்தனர். மதினா பிராந்தியத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வந்த ஒரு கனரக வாகனத்துடன் அவர்களது பேருந்து நேருக்குநேர் மோதியது.

இந்த விபத்தில், 35 பேர் பலியானதுடன் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அல்-ஹம்னா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடி, பலியானோர் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில்

“சவுதி அரேபியாவில் மெக்கா அருகே பேருந்து விபத்து ஏற்பட்டது பற்றி அறிந்து வேதனை அடைந்தேன். பலியானோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.