உலகிலேயே ஒரே நாளில் அதிக உயிரிழப்புகள் பதிவாகிய நாடாக இந்தியா

Tamil News large 2525063
Tamil News large 2525063

உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் மாத்திரம் உயிரிழப்புகள் அதிகம் பதிவாகிய நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 46 ஆயிரத்து 484 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி இந்தியாவில் மொத்தமாக 14  இலட்சத்து 52 ஆயிரத்து 503 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

அத்துடன் புதிதாக 636 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 33  ஆயிரத்து 448  ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரை 9  இலட்சத்து 53  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திருப்பியுள்ள அதேவேளை 4 இலட்சத்து 95  ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைத்திய கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.