வெளியேற்றப்பட உள்ள சுற்றுலாப் பயணிகள் உட்பட 80,000 பேர்!

566965
566965

வியட்நாமில் பிரபல சுற்றுலாத் தளமான டா நாங் பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருப்பதைத் தொடர்ந்து அங்குள்ள சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட உள்ளனர்.

இதுகுறித்து வியட்நாம் அரசுத் தரப்பில்,
“வியட்நாமின் பிரபல சுற்றுலாப் பகுதிகளில் ஒன்று டா நாங். இங்கு கடந்த சனிக்கிழமை சுற்றுலாப் பயணி ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு பேருக்குக் கொரோனா தொற்று அங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வியட்நாமில் கடந்த நூறு நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது அங்குள்ள சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றும் நடவடிக்கை வேகமாக நடந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் உட்பட 80,000 பேர் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட உள்ளனர். நான்கு நாட்களில் அவர்கள் வெளியேற்றப்பட உள்ளனர்.உள்நாட்டு விமான நிறுவனங்கள் 100 விமானங்கள் டா நாங்கிலிருந்து 11 வியட்நாமிய நகரங்களுக்கு இயக்குவதாக” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

95.5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வியட்நாமில் முதலாவது கொரோனா தொற்றாளர் ஏப்ரல் முதல் அடையாளம் காணப்பட்டார்.

இந்நிலையில், வியட்நாமில் கொரோனாவால் 431 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதுவரை உயிரிழப்பு பதிவாகவில்லை ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது.

கொரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.

உலகம் முழுவதும் சுமார் ஒரு கோடியே 68 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 இலட்சத்து 62 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.