அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் கோரிக்கை நிராகரிப்பு!

download 6 3
download 6 3

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை பிற்போட வேண்டுமென அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை குடியரசு தரப்பின் உயர் மட்ட அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

செனட் சபையின் பெரும்பான்மை தலைவரான மிச் மெக்கேனெல் மற்றும் சிறுபான்மை தலைவர் கெவின் மெக்கார்த்தி ஆகியோர் குறித்த கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை பிற்போடுமாறு அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியிருந்தார்.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் அஞ்சல் மூல வாக்களிப்பின் ஊடாக ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமெரிக்காவின் ஆறு மாநிலங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

குறித்த முறைமையில் தேர்தலை நடாத்துவதன் ஊடாக மோசடி இடம்பெறுகின்றமைக்கான வாய்ப்புகள் காணப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அத்துடன் கொவிட்-19 தாக்கம் குறைவடைந்து மக்கள் வழமை போன்று வாக்களிப்பதற்கு செல்லுவதற்குரிய காலம் வரையில் தேர்தலை நடாத்த கூடாதெனவும் அவர் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்தநிலையில் தேர்தலை பிற்போடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என குடியரசு தரப்பினர் கூறியுள்ளனர்.

காங்கிரஸின் அனுமதியுடனேயே தேர்தலை பிற்போட முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.