வட்ஸ் அப் சேவைக்கு வரி விதிப்பு – போராட்டத்தில் மக்கள்

Lebanon
Lebanon

பொருளாதார நெருக்கடி காரணமாக லெபனான் நாட்டில் வரி வருவாயை பெருக்கும் நோக்கத்தில் வட்ஸ் அப், பேஸ்புக் மெசெஞ்சர் ஆகியவற்றிக்கு வரி விதிக்க லெபனான் அரசு முடிவு செய்தமைக்கு எதிராக லெபனான் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஒவ்வொரு அழைப்புக்கும் 0.20 டொலர் வரி விதிப்பதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.

இதைக் கேட்டதும் அந்த நாட்டு மக்கள் கொதித்தெழுந்தனர். கடந்த 2 நாட்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் கூடி அரசாங்கம் பதவி விலகக்கோரி கோ‌‌ஷங்களை முழங்கினார்கள். சாலைகளில் டயர்களை கொளுத்திப்போட்டார்கள்.

பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் இடையே மோதல் வெடித்ததில் பலர் படுகாயம் அடைந்தனர். நிலைமை மோசமாவதை உணர்ந்த அரசு அடிபணிந்தது. வட்ஸ் அப், பேஸ்புக் மெnrஞ்சர், அப்பிள் பேஸ்டைம் அழைப்புகளுக்கு விதித்த வரி விதிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.

இந்நிலையில் எல்லா மக்களுக்கும் உணவு, எரிபொருள், மற்ற அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றி வைக்க வேண்டும், இல்லையேல் பதவி விலக வேண்டும் என்று மக்கள் முழங்கி வருகின்றனர்.