லெபனானின் தலைநகர் பெய்ருட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில்!

lebanan 1
lebanan 1

லெபனானின் தலைநகர் பெய்ருட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் பின்னர் பலர் தலைவலி, வாந்திபேதி போன்ற நோய்களுக்குள்ளாகி உள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 154 பேர் உயிரிழந்ததுடன் 5 ஆயிரம் பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் இதுவரையில் 14 இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், லெபனானில் உள்ள மருத்துவமனைகளில் குருதி தீர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதனையடுத்து அந்த நாட்டுக்கான இலங்கை தூதுவர் ஷானி கருணாரட்ன உள்ளிட்ட அங்கு பணியாற்றும் உறுப்பினர்களும் இரத்ததானம் வழங்கியுள்ளனர்.

இதேவேளை, கொரொனா வைரஸ் தாக்கம் காரணமாக லெபனானில் சிக்கியுள்ள 285 இலங்கையர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லெபனானுக்கான இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.