ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி!

download 13
download 13

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தற்போது ஆபத்தான நிலையில் உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் பிரணாப் முகர்ஜி. இவர் நேற்று வழக்கமான பரிசோதனைக்கான மருத்துவமனை சென்ற போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவரது அலுவலகம் சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், நேற்று இரவு திடீரென பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது மூளையில் இருந்து ரத்த கட்டி ஒன்று நீக்கப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சைக்குபின் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போதும் அவர் ஆபத்தான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் ‘‘இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லி ராணுவ மருத்துவமனையில் நேற்று ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். உயிர் வாழ்வதற்காக அவருக்கு மூளையில் உள்ள கட்டியை நீக்குவதற்கான சத்திரசிகிச்சை நடைபெற்றது. சத்திரசிகிச்சைக்குப்பின் தொடர்ந்து அவர் மோசமான நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றும் அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது’’என்று தெரிவித்துள்ளது.