இழப்பை சந்திக்கும் நிலையில் போயிங் நிறுவனம்

d 1
d 1

மேக்ஸ் ஜெட் ரக விமானங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் போயிங் நிறுவனம் மேலும் பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பை சந்திக்க நேரிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

போயிங் நிறுவனத்தின் தயாரிப்பான 737 MAX ரக விமானங்களை பல்வேறு விமான போக்குவரத்து நிறுவனங்கள் வாங்கி பயன்படுத்தி வந்த நிலையில், 2 விமானங்கள் விபத்தில் சிக்கி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தின. இதனால் போயிங் நிறுவனத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட்டதோடு, அதன் விளைவாக பெரும் இழப்பையும் சந்தித்தது.

இந்நிலையில், சோதனையின்போதே மேக்ஸ் ரக விமானங்களின் இயக்கத்தில் பிரச்சனைகள் இருந்தது, இரு போயிங் ஊழியர்கள் தகவல் பரிமாற்றத்தின் மூலம் தெரியவந்திருப்பதாக செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக போயிங் நிறுவன பங்குகள் 5.7 சதவீதம் அளவுக்கு சரிந்தன.

மேக்ஸ் ரக விமானங்களின் உற்பத்தியை போயிங் ஏற்கெனவே குறைத்துவிட்ட நிலையில், முற்றாக நிறுத்தும் நிலை ஏற்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.