விஷப்பாம்பை கொட்டி விரட்டிய தேனீ

1ll 2
1ll 2

அமெரிக்காவில், மற்றொரு பாம்பை சாப்பிட முயன்ற விஷப்பாம்பை தேனீ கொட்டி விரட்டிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புளோரிடா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இவாஞ்சலின் கம்மிங்ஸ் என்பவர், அண்மையில் தனது வீட்டின் பின்புறம் விஷத்தன்மை கொண்ட((Coral snake)) பாம்பு ஒன்று மற்றொரு பாம்பை((rat snake)) சாப்பிட முயல்வதை கண்டார்.

மரக்கிளையில் தொங்கியபடி இருபாம்புகளும் சண்டையிட்டு கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த தேனீ ஒன்று விஷத்தன்மை கொண்ட பாம்பை விரட்ட முயன்றது. இறுதியாக தேனீ பாம்பின் தலை பகுதியை கொட்டியதும், வலி பொறுக்க முடியாமல் விஷப்பாம்பு விலகி சென்றது.

இந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பார்த்த பலரும், அரிய நிகழ்வை படம் பிடித்து பதிவு செய்த இவாஞ்சலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.