ட்ரம்புக்கு ஆதரவாக நடத்தப்பட்ட படகுப் பேரணி உலக சாதனை படைக்கவுள்ளதாக தகவல்கள்!

EffZYDMXoAQb6 1
EffZYDMXoAQb6 1

அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக நடத்தப்பட்ட படகுப் பேரணி உலக சாதனை படைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் போட்டியிடுகின்றார்.

இருவரும் கடுமையான தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் நியூஜெர்ஸி, டெலவர், அலபாமா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவு திரட்டும் வகையில் படகுப் பேரணி இடம்பெற்றன.

இதபோன்று அமெரிக்காவின் புளோரிடாவின் “கிளியர்வோட்டர்” நகருக்கு அருகே பிரமாண்ட படகுப் பேரணி நடத்தப்பட்டது.

இந்த படகு பேரணி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், பேரணியில் 2000 க்கும் அதிகமான படகுகள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, மலேசியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட படகுப் பேரணியில் ஆயிரத்து 180 படகுகள் பங்கேற்றதாகவும் தற்போது அதனைவிட அதிகம் பேர் ட்ரம்புக்கு ஆதரவான படகுப் பேரணியில் பங்கேற்றுள்ளதால் மலேசியாவில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனையை இது முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.