படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 45 பேர் பலி

mysteriousdeathofapracticingfemaledoctorinchennai 2
mysteriousdeathofapracticingfemaledoctorinchennai 2

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் வகையில் அகதிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 45 பேர் உயிரிழந்தனர்.

இந்த தகவலை ஐ.நா தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் மத்திய தரைக்கடலில் லிபிய கடற்பகுதியில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சர்வதேச இடம்பெயர் அகதிகள் அமைப்பு, ஜ்வாரா கடல்பகுதியில் படகின் இயந்திரம் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் அதில் 37 பேர் உயிர் பிழைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதில் தப்பித்தவர்கள் அனைவரும் செனகல், மாலி, சாட் மற்றும் கானா நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

படகு விபத்துக்குள்ளானதை அறிந்த உள்ளூர் மீனவர்கள் விரைந்து சென்று கடலில் மூழ்கியவர்களை மீட்டுள்ளனர். பின்னர் அவர்கள் கடலோரக் காவல்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க் கிழமையன்று, லிபிய கடற்பகுதியில் இருந்து செல்லும் ரப்பர் படகில் 100 பேர் பயணம் செய்வதாக லிபிய மற்றும் இத்தாலிய கடலோர காவல்படையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தொண்டு நிறுவனங்கள் குற்றம்சாட்டியுள்ளன.