தோனிக்கு பிரதமர் மோடி புகழ்ந்து வாழ்த்து கடிதம்

1597982811 dhoni 2
1597982811 dhoni 2

ஐ பி எல் போட்டியில் தோனி சிறப்பாக ஆடினால், 20க்கு 20 உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறினார். இவ்வேளையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த சனிக்கிழமை அன்று அறிவித்தார் தோனி.

இந்நிலையில் தோனியைப் புகழ்ந்து கடிதம் எழுதியுள்ளார் பிரதமர் மோடி. இதை மிக மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் தோனி பகிர்ந்துள்ளார். கலைஞன், இராணுவ வீரர், விளையாட்டு வீரர் என அனைவரும் தங்களுடைய கடின உழைப்பும் தியாகமும் கவனிக்கப்பட்டு பாராட்டப்படுவதை எதிர்பார்ப்பார்கள். பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று ட்வீட் வெளியிட்டுள்ளார் தோனி.

பாராட்டுக் கடிதத்தில் பிரதமர் மோடி கூறியதாவது: உங்களுடைய பாணியில் ஆகஸ்ட் 15 அன்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்டீர்கள் தோனி. உங்களுடைய ஓய்வு முடிவு 130 கோடி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

15 ஆண்டுகளில் இந்திய அணிக்குச் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளீர்கள். 2011 உலகக் கிண்ணத்தை முடித்த விதம் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். இளைஞர்களைக் கொண்டு 2007 20க்கு 20 உலகக் கிண்ணத்தை வென்றீர்கள்.

சிறிய நகரத்தில் பிறந்து தேசத்தின் அடையாளமாக மாறியுள்ளீர்கள். இராணுவத்தில் கெளரவமான பதவியில் பணியாற்றிய போது மகிழ்ச்சியுடன் இருந்தீர்கள். வெற்றியோ தோல்வியோ அனைத்து நேரத்திலும் அமைதியைக் கடைப்பிடித்தீர்கள்.

இனிமேல் சாக்ஷியும் ஜிவாவும் உங்களுடன் அதிக நேரம் செலவிடுவார்கள். அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர்களுடைய தியாகமும் ஆதரவும் இல்லாமல் எதுவும் சாத்தியமாகியிருக்காது. உங்களுடைய வருங்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.