உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கை!

202004181223033790 All Countries Will Face This WHO After China Revises SECVPF
202004181223033790 All Countries Will Face This WHO After China Revises SECVPF

12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், பெரியவர்களைப் போன்று கொரோனா தொற்று பரவாமல் இருக்க முக்கவசங்களை அணிய வேண்டியது அவசியமாகுமென என உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில்  உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

6 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆபத்து அடிப்படையிலான அணுகுமுறையில் முக கவசங்களை அணிய வேண்டும்.

அந்தவகையில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் குறிப்பாக மற்றவர்களிடமிருந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத சூழலில் முக்கவசங்களை அணிய வேண்டும்.

கொரோனா தொற்று பரவுவதைக் குறைக்க உதவும் வகையில் கடந்த ஜூன் 5 ஆம் திகதி முக்கவசங்களை அணியுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் முதலில் மக்களுக்கு அறிவுறுத்தியது.

இருப்பினும் சிறுவர்களுக்கான வழிகாட்டுதலை வெளியிடாத நிலையில் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.