அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக ட்ரம்ப்!

530998
530998

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப்பின் பெயரை அக்கட்சி இன்று (25) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபிடன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜோபிடனை ஜனாதிபதி வேட்பாளராக ஜனநாயக கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில் இன்று குடியரசுக் கட்சியின் தேசியக் குழு கூட்டம் இடம்பெற்றிருந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, துணை ஜனாதிபதி வேட்பாளராக மைக் பென்ஸ் போட்டியிடவுள்ளதாக குடியரசுக் கட்சி அறிவித்துள்ளது.