கொரோனா தொற்றுறுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு மூன்றாமிடம்!

outbreak coronavirus world 1024x506px 1 620x330 1
outbreak coronavirus world 1024x506px 1 620x330 1

சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்திலுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 77 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது என இந்திய சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிககையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்தியாவில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 87 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்தியாவில் தொற்றுறுதியான 25 லட்சத்து 83 ஆயிரத்து 948 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

அத்துடன் இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 57 பேர் உயிரிழந்துள்ளதோடு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் சர்வதேச ரீதியில் கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 46 இலட்சத்து 28 ஆயிரத்து 81 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் உலகளாவிய ரீதியில் இதுவரை 8 இலட்சத்து 35 ஆயிரத்து 627 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறியினும், ஒரு கோடியே 70 இலட்சத்து 94 ஆயிரத்து 174 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.