நியூஸிலாந்தில் 3 மாதங்களுக்குப் பிறகு கொரோனா தொற்றால் ஒருவா் பலி

e6d93704 4597 4afe b9af 47aec05f5e6d 1587904304122

நியூஸிலாந்தில் 3 மாதங்களுக்குப் பிறகு ​கொரோனா நோய்த்தொற்றால் ஒருவா் உயிரிழந்தாா்.

ஆக்லண்ட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 50 வயது கொரோனா நோயாளி, அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தாா்.

நாட்டில் கொரோனா நோய்க்கு ஒருவா் பலியாவது, 3 மாதங்களுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். இத்துடன், நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கை 23-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நியூஸிலாந்தில் அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,764-ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் நோய்த்தொற்று பரவவுவதைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், செப்டம்பா் மாத இடைக்காலம் வரை தொடா்ந்து அமலில் இருக்கும் என்று பிரதமா் ஜெசிந்தா ஆா்டா்ன் (படம்) அறிவித்துள்ளாா்.

அங்கு கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 1,630 போ், அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 111 கொரோனா நோயாளிகள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.