கேரள நிதி அமைச்சா் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Thomas Issac
Thomas Issac

கேரள அமைச்சரவையில் கொரோனா வைரஸால் முதல்முறையாக அமைச்சர் தாமஸ் ஐசக் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று(06) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தெரியவருகையில் அமைச்சா் தாமஸ் ஐசக்குக்கு சிறிது தடுமலுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதனைத் தொடா்ந்து அவரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவா் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை அடுத்து அவா் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் பணிபுரிந்த அலுவலா்களுக்கு தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மாநிலத்தில் அமைச்சா் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.