கல்வி முறையில் மத்திய- மாநில அரசுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது: நரேந்திர மோடி

wallpapersden.com narendra modi prime minister 1920x1280
wallpapersden.com narendra modi prime minister 1920x1280

கல்வி முறையில் மத்திய- மாநில அரசுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

34 வருடங்களுக்குப் பின்னர் புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக மாநில ஆளுநர்கள், கல்வி அமைச்சர்கள் மற்றும் துணைவேந்தர்கள் பங்கேற்ற மாநாட்டில் பிரதமர் மோடி உரையொன்றை நிகழ்ந்தி இருந்தாார்.

குறித்த உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மேலும் கூறியுள்ளதாவது,நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் கல்விக் கொள்கையும் கல்வி முறையும் முக்கிய வழிமுறைகளாக இருக்கின்றன.

ஆனால் வெளிநாட்டு கொள்கை, இராணுவக் கொள்கை போன்று கல்விக் கொள்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது அல்ல. அது மக்களுக்கு பொதுவானது.

கல்விக் கொள்கையில் கூடுதல் ஆசிரியர்களும், பெற்றோர்களும் இணைவதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் அதில் இணைவார்கள்.

சிறந்த சர்வதேச கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது கிளைகளை திறக்க புதிய கல்விக் கொள்கை உதவும். சாதாரண ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களும் அவற்றில் சேர முடியும்.

புதிய கல்விக் கொள்கை நமது இளைஞர்களின் எதிர்கால தேவைக்கான அறிவையும் திறமைகளையும் வளர்த்துக்கொள்ள உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.