தீவிர சிகிச்சையில் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர்!

1598016960844
1598016960844

ரஷ்ய எதிர்கட்சித் தலைவரும், அதிபர் விளாடிமிர் புடினின் தீவிர விமர்சகருமான அலெக்ஸி நவால்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருவதால், அவரை கொல்ல சதி நடந்திருப்பதாகவும், அதனால் தேநீரில் விஷம் வைத்துக் கொடுத்துவிட்டதாகவும் நவால்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யார்மிஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோமா நிலையில் இருந்த அவர் தற்போது அதிலிருந்து மீண்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் விஷம் கொடுக்கப்பட்டதாக உறுதியாக தெரியவில்லை. இந்த நிலைக்கு பல காரணங்கள் இருக்கலாம் என துணை மருத்துவர் அனடோலி கெலினிஷென்கோ கூறியுள்ளார்.

அலெக்ஸி நவால்னி தற்போது வாய்மொழி ஊடாக பதிலளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.