கொரோனாவால் ஒரே நாளில் இந்தியாவில் பதிவான 1,133 மரணங்கள்!

22 696x463 1
22 696x463 1

கொரோனா வைரஸ் இந்தியாவை நிலைகுலையச் செய்து வருகிறது. இங்கு தினசரி தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் ஆயிரத்து 133 பேர் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் பதிவான அதிகூடிய மரணங்கள் இதுவென இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் நாடு முழுவதும் கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்து 80 ஆயிரத்து 423 ஆக உயர்ந்தது. இது மத்திய, மாநில அரசுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதுடன், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தி இருக்கிறது.

மேலும் 8 லட்சத்து 83 ஆயிரத்து 697 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 33 லட்சத்து 23 ஆயிரத்து 951 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.