சீனாவின் குற்றச்சாட்டை மறுக்கும் இந்தியா!

.jpg
.jpg

சீனாவின் லடாக் பகுதியில் இந்தி இராணுவத்தினர் எல்லை மீறியதுடன் துப்பாக்கி பிரயோகத்தினையும் மேற்கொண்டனர் என சீன பாதுகாப்பு பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது.

அதற்கு பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சீன இராணுவம் தெரிவித்தளு தெரிவித்துள்ளது.

எனினும் இந்திய இராணுவம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன.

நேற்று லடாக்கின் பாங்கோங் ஏரியின் தென் கரையில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்த இந்திய வீரர்கள் துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டதாக சீனா கூறியுள்ளது.

“சீன எல்லைக் காவலர்கள் நிலைமையை உறுதிப்படுத்த எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்று மக்கள் விடுதலை இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருந்த நிலையில், இந்திய ராணுவம் தற்போது இந்த குற்றச்சாட்டினை மறுத்துள்ளது.

மேலும், நேற்றை தினம் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் துருப்புக்கள் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியினைக் கடந்து இந்திய ராணுவத்தின் நிலையை நெருங்க முயற்சித்தனர் என்றும், அதைத் தொடர்ந்து நிலையை ஸ்திரப்படுத்திக்கொள்ளும் நோக்கில் விண்ணை நோக்கி துப்பாக்கியால் சீன ராணுவத்தினர் சுட்டனர் என்றும் இந்திய ராணுவம் குறிப்பிட்டள்ளது.