கொரோனாவால் பிரேசிலில் 24 மணி நேரத்தில் 330 பேர் உயிரிழப்பு

202004162144107688 Deaths In US Due To Coronavirus Cross 30000 SECVPF
202004162144107688 Deaths In US Due To Coronavirus Cross 30000 SECVPF

பிரேசிலில் கொரோனாவினால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் உயர்வடைந்து வருகிறது .

அதாவது கடந்த 24 மணி நேரத்தில் 330 பேர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 26 ஆயிரத்து 960 ஆக அதிகரித்துள்ளது.

41 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 33 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கொரோனாவால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது .