அமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லா பெயர்!

vikatan 2020 03 121dbbda 4927 4033 a18c 41730f3cee83 COVER PHOTO NEWS 30 1 20 4
vikatan 2020 03 121dbbda 4927 4033 a18c 41730f3cee83 COVER PHOTO NEWS 30 1 20 4

அமெரிக்க விண்கலத்திற்கு விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிறந்த கல்பனா சாவ்லா, விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வம்சாவழியை சேர்ந்த பெண் என்ற பெருமைக்குரியவர்.

இந்நிலையில் அமெரிக்க உலகளாவிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான நார்த்ரோப் க்ரம்மன் என்ற வர்த்தகரீதியிலான விண்கலத்துக்கு,மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயரை சூட்டியுள்ளது.

விண்வெளிக்கு சென்ற இந்திய வம்சாவழியை சேர்ந்த முதல் பெண்ணாக வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற காரணத்திற்காகவே கல்பனா சால்வாவின் பெயரை தேர்ந்தெடுத்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா விண்கலம் வரும் 29-ம் திகதி நாசாவின் மிட் அட்லாண்டிக் ஸ்பேஸ்போர்ட்டிலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.