கொரோனா தொற்றை தடுப்பதற்கு மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்யக்கூடிய தடுப்பூசி!

202009110642182223 Injectable spray vaccine to prevent corona in China SECVPF
202009110642182223 Injectable spray vaccine to prevent corona in China SECVPF

கொரோனா தொற்றை தடுப்பதற்கு மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்யக்கூடிய தடுப்பூசி மருந்து சீனாவில் முதன் முதலாக உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹாங்காங் பல்கலைக்கழகம், ஜியாமென் பல்கலைக்கழகம் மற்றும் பீஜிங் வாண்டாய் உயிரியல் மருந்தகம் ஆகியவற்றின் கூட்டு தயாரிப்பாக இது வெளிவரவுள்ளது.

இத்தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு சீன தேசிய மருத்துவ தயாரிப்புகள் கழகம் தனது ஒப்புதலை அளித்துள்ள நிலையில், இதன் மருத்துவ பரிசோதனை நவம்பர் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்படி, முதல் கட்டமாக 100 பேருக்கு மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்து அதன் விளைவுகள் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.