பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை கொடுங்கள்- ஸ்டாலின்

201911071944142708 Stalin dissuades supporters from making vitriolic comments SECVPF
201911071944142708 Stalin dissuades supporters from making vitriolic comments SECVPF

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை கொடுங்கள் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா முழுவதும் நேற்று(13) நீட் தேர்வு நடைபெறும் சூழ்நிலையில், 3 மாணவர்களும் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்டது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது குறித்து மு.க.ஸ்டாலின் கூறுகையில், நீட் தேர்வு மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் பணிவான வேண்டுகோள். நீட் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு முறை செய்தியை கேட்கும்போதும் மிகவும் வேதனையாக இருக்கிறது. மாணவர்களை கெஞ்சி கேட்கிறேன், இனி யாரும் தற்கொலை முடிவு எடுக்காதீர்கள்.

பெற்றோர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து பயப்படுவது நியாயம்தான். ஆனால், அதே பிள்ளைகளுக்கு மன உறுதியையும் தோல்வியை தாங்கக்கூடிய சக்தியையும் சொல்லிக்கொடுங்கள் என கூறியுள்ளார்.