கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள கடன் சுமையை அடுத்து இந்திய அரசு எடுத்த அதிரடி தீர்மானம் !

india flag
india flag

இந்திய வங்கிகளுக்கு 200 பில்லியன் இந்திய ரூபாவை வழங்குவதற்கு ஒப்புதல் வழங்குமாறு இந்திய அரசாங்கம் நாடாளுமன்றத்தைக் கோரியுள்ளது.

கொரோனா தொற்று பரவலினால் ஏற்பட்டுள்ள கடன் சுமையைக் குறைப்பதற்காக இந்த நிதியை அரச வங்கிகளுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் 48 இலட்சத்து 50 ஆயிரத்து 887 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், இந்தியாவில் 79 ஆயிரத்து 784 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையிலேயே, கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள கடன் சுமையைக் குறைப்பதற்காக இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.