ஜனவரியில் விடுதலையாகிறார் சசிகலா: பரபரப்பு தகவல்

vikatan 2019 05 45e00cef 83ab 41bb b9bd 4f8a8058b324 149682 thumb
vikatan 2019 05 45e00cef 83ab 41bb b9bd 4f8a8058b324 149682 thumb

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெங்ளூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் தண்டனை காலம் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது.

எனினும் அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலையாக வாய்ப்புள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், பெங்ளூர் சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என ஆர்.டி.ஐ. மூலம் சிறைத்துறையிடம் தகவல் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள சிறைத்துறை நிர்வாகம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி சசிகலா விடுதலையாகிறார் என தெரிவித்துள்ளது.

மேலும், சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை என்றும் 10 கோடி ரூபாய் அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

அதேநேரம், அபராத தொகையை கட்டத் தவறினால் சசிகலாவின் விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும் எனவும் சிறைத்துறை தெரிவித்துள்ளது.