அமெரிக்காவில் காட்டுத்தீ பரவலுக்கு காலநிலை மாற்றம் காரணமல்ல -ட்ரம்ப்

1599653515457
1599653515457

அமெரிக்காவில் காட்டுத்தீ பரவலுக்கு காலநிலை மாற்றம் காரணமல்ல என அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

காட்டுத்தீப்பரவல் ஏற்பட்ட பகுதிகளுக்கான விஜயம் ஒன்றினை அவர் முன்னெடுத்திருந்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

காட்டுத்தீ பரவலுக்கு வனப்பாதுகாப்பு நிர்வாகத்தின் மோசமான நடவடிக்கைகளே காரணம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அமெரிக்காவில் கலிபோர்னியா மட்டுமல்லாது, வொஸிங்டன் உள்ளிட்ட பகுதியும் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒகஸ்ட் மாதம் முதற்பகுதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 35 மரணங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் தற்போது வானிலை குளிர் தன்மையில் உள்ளது. அது தொழிநுட்ப ரீதியாக அறியப்படாது இருக்கலாம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.